நாரந்தாழ்வு குளத்தினை அபிவிருத்தி செய்து தாருங்கள், விவசாய அமைப்பு கோரிக்கை…!

பூநகரி மட்டுவில்நாடு மெற்கில் உள்ள நாரந்தாழ்வு குளத்தினை அபிவிருத்தி செய்து தாருங்கள் என விவசாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மட்டுவில்நாடு மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரந்தாழவு குளமானது கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமானதாகும். குறித்த குளத்தினை நம்பி விவசாய நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படாத பொழுதிலும் குறித்த குளத்திலிருந்து விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் பாரிய நன்மை ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குளம் நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. இதனால் அக்குளத்தில் பாரியளவிலான நீரை தேக்க முடியாது உள்ளது. தற்பொழுது வரட்சியான காலநிலை காணப்படும் நிலையில் குறித் குளத்தில் காணப்படும் மீன்கள் இறந்து காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது, இவ்வாறான நிலையில் சிறு குன்றுகளில் ஓரளவு நீர் காணப்படுகின்றது. அதேவேளை குறித்த குளத்தில் சுமார் 5 அடி மண் அகழப்பட்டு அதிலிருந்து கச்சான் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையையும் அவானிக்க முடிகின்றது, குறித்த பகுதியில் வருடம் ஒன்றுக்கு 3 தடவை கச்சான் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு குளமாகும்.
 இவ்வாறான நிலையில் குறித்த குளத்தினை ஆழப்படுத்தி அபிவிருத்தி செய்து தருவதன் ஊடாக, மேட்டுநில பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.
அதேவேளை, குறித்த குளத்தினை அண்மித்த அரச காணிகளை துப்பரவு செய்து, அப்பகுதி மக்களிற்கு விவசாய காணிகளாக வழங்கப்பட்டால், அதன் ஊடாக வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாய புரட்சி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறான குளங்களையும் அடையாளம் கண்டு அபிவிரு்ததி செய்து தருமாறு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews