கப்ரக வாகனம் – லொறி விபத்தில் தாய் பலி; மகன் படுகாயம் |

எம்பிலிப்பிட்டிய தனமல்வில வீதியில் இடம்பெற்ற விபத்தில் 56 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவனகல பிரதேசத்தில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இவர்கள் பயணித்த கப் ரக வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக செவனகல பொலிசார் தெரிவித்தனர்.

கப் ரக வாகனத்தில்  முன் ஆசனத்தில் பயணித்த ஹம்பேகமுவ அரம்பேகம பகுதியினை சேர்ந்த குறித்த பெண் வைத் தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கப் ரக வாகனம் ஓட்டிச் சென்ற நிலையில் படுகாயமடைந்த இறந்த பெண்ணின் மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews