வடமராட்சி, மற்றும் வடமராட்சி கிழக்கு ஊடக நண்பர்களின் ஒன்றுகூடல்…!

வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு  ஊடக நண்பர்களின் ஒன்றுகூடல் நேற்று  (24.09.2022) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வடமராட்சி நெல்லியடியில் அமைந்துள்ள கனகசபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம், யூடியூப் சனல் ஆகிய செய்தித்தளங்களில் பணியாற்றும் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு  ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழக அரச அறிவியல் துறை தலைவர்  பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், கோப்பாய் ஆசிரிய கலாசாலை தமிழ் பாட விரிவுரையாளர் திரு. வேல் நந்தகுமார், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான  சி.அ.யோதிலிங்கம், மூத்த ஊடகவியலாளர் அ.நிக்சன், யாழ் ஊடக அமையத்தின் ஸ்தாபகரும் இயக்குநருமான மூத்த ஊடகவியலாளர் அ . தயாபரன், மூத்த ஊடகவியலாளர் எஸ் தில்லைநாதன், தீம்புனல் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான சூரன்.ஏ.ரவிவர்மா ஆகியோர்  இக்கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்ததுடன் ஊடக பணி தொடர்பாக காத்திரமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் வடமராட்சி, வடமராட்சி கிழக்கை சேர்ந்த முப்பதிற்க்கு அதிகமான  இளம் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டதுடன் வடமராட்சி ஊடக நண்பர்கள் எனும் அமைப்பும் ஏற்படுத்துவதற்க்காக 9 பேர் கொண்ட தற்காலிக ஏற்பாட்டு குழுவினர் தெரிவு செய்யப்பட்டதுடன் யாழ் ஊடக மைய்ய உருவாக்குனர் மூத்த. ஊடகவியலாளர் திரு தயாபரன், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம், மஊத்த ஊடகவியலாளர்களான  எஸ் தில்லைநாதன், சூரன் இரவிவர்மா, ஆகியோர் ஆலைசனை குழுவினராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

 

Recommended For You

About the Author: bavany