திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நாளை தொழிலுக்கு செல்ல வேண்டாம்என யாழ் மாவட்ட கடற்தொழில் சம்மேளனம் அழைப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை தினம் கடற்தொழிலுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கோரி இந்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்க்கொடை வழங்கிய நாள் நாளை மறுதினம் திங்கட்கிழமை 35ஆவது ஆண்டாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பபாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை கடற்தொழிலுக்கு செல்வதனைத் தவிர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: bavany