ஐரோப்பா செல்ல காத்திருந்தவர்களுக்கு கிடைத்த பெரும் அதிர்ச்சி

ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 5 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எத்துகால பகுதியில் வைத்து நீர்கொழும்பு பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

46 வயதான இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக 7 பேரிடம் பெருந்தொகை பணத்தை பெற்றுள்ளார். ஒவ்வொரு நபரிடமும் 50 முதல் 70 இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நாட்டின் பல பகுதிகளிலும் வாடகைக்கு எடுத்த வீடுகளிலிருந்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin