வீதியில் வழிமறித்து துரத்தி.. துரத்தி வெட்டிக் கொலை!

தனிப்பட்ட தகராறினால் வீதியில் பயணித்த நபரை வழிமறித்த கொலை கும்பல் சரமாரியாக வாளால் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் திருகோணமலை – கண்டி வீதியில் பெதிஸ்புர என்ற இடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவத்தில் திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் கொலை சம்பவம் பதிவாகியுள்ளது. அதன் பிரதிகளை பொலிஸார் பெற்றுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews