போதிய அரிசி கையிருப்பில். இறக்குமதியை இடைநிறுத்த கோரிக்கை…!

நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறு போகத்தில் எதிர்பார்த்ததை விடவும் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக இந்த ஆண்டு 6 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி மாத்திரமே இறக்குமதி செய்யப்பட வேண்டும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்தார்.

இதேவேளை,  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில், மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்பினை ஏற்படுத்தும் பல நச்சு இரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நடத்திய ஆய்வில், இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் ஆய்விற்கமைய, நாட்டில் பயன்படுத்தப்படும் அரிசியில் ஆர்சனிக் அளவு 0.2 சதவீதம், ஈயம் 0.2 சதவீதம், பாதரசம் 0.1 சதவீதம், செலினியம் 0.3 சதவீதம் உள்ளடங்குகின்றது.

இவை அனைத்தும் கனரக உலோகங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin