பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் – கோட்டாபய வீட்டில் குவியும் அமைச்சர்கள்

சமகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியுள்ள மிரிஹான இல்லம் பரபரப்பாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் ஆதரித்த கட்சியான பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தினமும் கோட்டபாயவை சந்திக்க வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபயவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக சிலர் அவரை சந்திக்க வருவதாகவும், அவரை மீண்டும் தீவிர அரசியலுக்கு வருமாறு கோரிக்கை விடுக்க பலர் மிரிஹானவில் உள்ள வீட்டிற்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று மீண்டும் அரசியலுக்கு வருமாறு கோட்டாபயவுக்கு கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வந்தால் அவரைப் பிரதமராக நியமிக்க உறுப்பினர்கள் குழுவொன்றும் முயற்சித்து வருகின்றதுடன், அண்மைய நாட்களில் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் பகிரங்க அறிக்கையையும் வெளியிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் அரசியல் விவகாரங்களில் இருந்து முடிந்தவரை விலகி இருக்க வேண்டும் என்பதே கோட்டாபயவின் நிலைப்பாடு என தெரிய வருகிறது. இதனையே ராஜபக்ச குடும்பம் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறது. மீண்டும் அரசியல் ஈடுபட ராஜபக்சர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் 2015ஆம் ஆண்டு தோல்வியின் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முயற்சித்த போதிலும், உறவினர்களின் வேண்டுகோள் காரணமாக மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin