அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு விபரம் வெளியீடு

நாளை (17) முதல் 19ஆம் திகதி வரையான நாட்களுக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

விபரங்களின் படி, குறித்த நாட்களில் 1 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin