சீனாவில் திடீர் தீ விபத்து:இணையத்தில் வைரலாகும் காணொளி

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கீழ்தளத்தில் இருந்து மேல்தளம் வரை தீ பரவி எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது.

42 மாடி கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரையில் கிடைக்கவில்லை.

Recommended For You

About the Author: admin