சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று, கோபுரத்தை பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் உள்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாமரை கோபுரம்  திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நேற்று கிடைத்த வருமானம் புதிய சாதனையை எட்டியுள்ளது.

அதற்கமைய, திறக்கப்பட்ட முதல் நாளே பத்து லட்சம் ரூபாவை தாண்டி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரையிலும் தாமரை கோபுரத்தை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin