வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் தலையிடக்கூடாது –  உத்தரவிட்டார் அமைச்சர் டக்ளஸ்.

இவ்வாண்டு காலபோக செய்கையின்போது, வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள்  தலையிடக்கூடாது என உத்தவினை அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நேற்றைய கூட்டத்தில் வனலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் அதிகாரிகள் வருகை தந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

10 ஆண்டுகளிற்கு மேலாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட பகுதிகளை அடையாளப்படுத்தி கல்களை நடுவதுடன், விவசாயத்தில் ஈடுபடுவதை தடுப்பதும், அவர்களை தாக்குவதுமான சம்பவங்கள் இடம்பெறுகிறது.

இந்த நிலையில் நான் இவ்வாறான கண்டிப்பான உத்தரவை இடுகிறேன். இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சருடனும் பேசியுள்ளேன். இன்று இவ்வாறான அறிவிப்பை விடுப்பேன் என அமைச்சரிடமும் கூறியிருந்தேன்.

அந்த வகையில், கடல் வேளாண்மை, நீர் வேளாண்மை, விவசாயம் ஆகிய விடயங்களில் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் தலையிட வேண்டாம்.

இவ்வருடம் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். எனவே, குறித்த காணிகள் அவ்வந்த திணைக்களங்களிற்கு தேவைப்பட்டார், மாற்று இடங்களை வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த வருடம் எவ்வித தலையீடுகளையும் செலுத்த வேண்டாம். விவசாய நடவடிக்கைகள் உரிய முறையில் இடம் பெற அனுமதிக்குமாறு கூறுகிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews