யாழ்.ஆடியபாதம் வீதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து திருடர்கள் கைவரிசை!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பலசரக்க பொருட்களை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது..

இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கல்வியங்காடு – ஆடியபாதம் வீதியில் உள்ள குறித்த வர்த்தக நிலையத்தின் பிரதான வாசலின் பூட்டை உடைத்து உள்நுழைந்தே திருடர்கள், அரிசி, பால்மா, எண்ணெய், கோதுமை மா, பிஸ்கட் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews