மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம் பெற்றது.

இதன் போது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் பதாதைகள் ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

தொடர்ந்து, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் ஊடகங்களிற்கு வாசுகி கருத்து தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews