மாநகர தீயணைப்பு வாகனங்கள் இரண்டும் செயலிழப்பு.. மாற்று ஒழுங்கு தொடர்பில் தமக்கு தெரியாது என்கிறது தீயணைப்பு பிரிவு.

யாழ் மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்களும் செயலிழந்த நிலையில் மாற்றி ஒழுங்கு தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது என யாழ் மாநகர தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது  யாழ் மாநகர சபையின் ஒரு தீயணைப்பு வாகனம் 2020 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான நிலையில் இதுவரை திருத்தம் நடவடிக்கைகளை ஏதும் இடம் பெறவில்லை.
மற்றய தீயணைப்பு வாகனமும் பாழுதடைந்த நிலையில் யாழ் மாநகர வளாகத்துக்குள் கிடப்பில் கிடக்கிறது. இவ்வாறான நிலையில் யாழ் மாநகர பதில் முதல்வர் யார் மாநகர தீயணைப்பு வாகனம் அவசர திருத்த வேலைகள் இருப்பதன் காரணமாக ஒரு வாரத்துக்கு செயல்படாது என அறிவித்திருந்தார்.
 பதில் முதல்வருடைய அறிவிப்பும் கடந்த வாரத்துடன் நிறைவடைந்த நிலையில் மாநகர தீயணைப்பு வாகனம் செயல் இழந்த நிலையில் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் யாழ் மாநகர தீயணைப்பு பிரிவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது தீயணைப்பு வாகனம் செயலிழந்ததை உறுதிப்படுத்தியதுடன் மாற்று ஒழுங்கு தொடர்பில் தமக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது

Recommended For You

About the Author: Editor Elukainews