யாழ்.வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து கொள்ளை!

யாழ்.வல்வெட்டித்துறையில்  வீட்டைத் திறந்து 16 பவுண் தங்க நகைகளை களவாடிவிட்டு  மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓரிடத்துக்கு மாலை 5 மணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

11 பவுண் தாலிக்கொடி, 5 பவுண் காப்பு, மற்றும் 19 ஆயிரம் ரூபாய் பணம் என்பனவே திருட்ப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதிலால் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த திருடர் முன் கதவைத் திறந்து நகைகளைத் திருடிவீட்டு மீளவும் முன் கதை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸ் தடயவியல் பிரிவு சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews