யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ தெற்கைச் சேர்ந்த பியதிஸ்ஸ பண்டார என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை விறகு எடுக்கச் சென்றவரை மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாததனால் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே ஈச்சக்குளத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin