இராணுவ தேவைக்காக தனியார் காணி சுவீகரிப்பு, மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பால் இடை நிறுத்தம்…!

யாழ் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைகள் இன்றைய தினம் காலை 9:30 மணிக்கு இடம் பெறவிருந்த வேளை அங்கு திரண்ட பாராளுமன்ற உறுப்பினர செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்ட ஆலோசகர் ந.காண்டீபன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் உட்பட்ட குழுவினர் நில அளவை மேற்கொள்ள வந்த நில அளவையாளர்கள் மற்றும் அதிகாரிகளை நில அளவை மேற்கொள்ள செல்லவிடாது வீதிக்கு குறுக்கே இருந்து தடுத்து நிறுத்தியதுடன் குறித்த காணிகளை இராணுவத்திற்க்கு வழங்க விடமாட்டோம் என்று ஆதாரப்பூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடிபட்டனர். இப் போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்க்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில்  யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி செல்வதாக நில அளவை திணைக்கள அதிகாரி தெரிவித்ததற்க்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் கடிதம் எழுதி நில அளவை துணைக்கொண்டு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பி சென்ற நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
இதே வேளை போராட்ட இடத்தில் பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையில் போலீசார் ஆயதங்களுடனும் சிவில் உடையிலும் குவிக்கப்பட்டிருந்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews