150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டம்

எதிர்வரும் வாரத்தில் நான்கு எரிபொருள் கப்பல்களில் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை திறைசேரி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்கனவே வந்துள்ள இரண்டு டீசல் மற்றும் ஒரு மசகு எண்ணெய் கப்பல்களுக்கும் நாளைய தினம் வரவுள்ள பெட்ரோல்  கப்பலுக்குமே இந்த பணம் தேவைப்படுகிறது.

இந்தநிலையில் நிதியை தேடும் வழிகள் குறித்து மத்திய வங்கியுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக திறைசேரி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Recommended For You

About the Author: admin