பாதீட்டில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளிற்கு தீர்வு..நடராஜா ரவிக்குமார்…,!

இவ்வருட பாதீட்டில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளிற்கு தீர்வு கட்டப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளதாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிரியர் சம்பள அதிகரிப்பு கோரி நாடு முழுவதும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நிச்சயமாக ஆவர்களின் ஆர்ப்பாட்ட கோரிக்கையானது நியாயமானது. ஏனெனில் கடந்த பல வருடமாக ஒவ்வொரு அரசாங்கமும் தட்டிக்கழித்துக்கொண்டு வந்திருந்தது. அதன் காரணமாக ஆசிரியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
எங்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி, அமைச்சரவை அதற்காக நடவடிக்கையை மேற்கொள்ளும். கடந்த வாரம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அவர்களை சந்தித்தபொழுது அப்பிரச்சினைக்கு என்ன தீர்வை கொக்க போகின்றீர்கள் என கேட்டிருந்தேன்.
நிச்சயமாக அதற்கான தீர்வு வரும் டியம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாதீட்டில் பெற்று தருவதாக குாரியுள்ளார்கள். நிச்சயமாக அதற்காக நாங்கள் குரல் கொடுத்துள்ளோம். எதிர்வரும் காலங்களிலும் அதற்காக குரல் கொடுப்போம்.
இதில் நாங்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்காலத்தில் ஆசிரியர் சமூகம் முட்டாள்த்தனமாக செயற்படுகின்றார்கள். அது மிகவும் கவலை அளிக்கின்றது. கொவிட் வைரஸ் மற்றும் டெல்ட்டா தொற்றுக்களிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றார்கள்.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று தொற்று பலவர் அதிகரித்து காணப்படுகின்றது. ஆசிரியர் சமூகம் என்பது ஒரு சமூகத்தை முன்மாதிரியாக வழிநடத்தவேண்டிய நிலையில் முட்டாள்த்தனமாக செயற்பட்டுள்ளது. அவ்வாறு செயற்பட்டிருக்கக்கூடாது.
ஆசிரியர்கள் தமது கடமையை சரிவர செய்கின்றார்களா என்று பார்க்க வேண்டும். அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஊதியத்திற்கு நீங்கள் தொழில் செய்கின்றீர்களாவென்றால் இல்லை. நற்றுக்கு தொன்னூறு வீதமானவர்கள் நல்லவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால், 10 வீதிமானவர்கள் ஊதியத்தை பெற்றுக்கொண்டு பாடசாலைக்க சென்று மாணவர்களை முன்னிலைக்குட்படுத்துவது இல்லை. மாறாக தமது வருமானத்தை கூட்டிக்கொள்வதற்காக விசேட வகுப்புக்களை நடார்த்தி வருமானத்தை பெற்றுக்கொள்வதைதான் இந்த ஆசிரியர் சமூகம் மேற்கொள்கின்றது.
பாடசாலைகளில் வகுப்பறையில் உள்ள 40 மாணவர்களிற்கு கல்வி கற்பித்து கொடுக்கும்போது சுகவீனங்கள் ஆசிரியர்களிற்கு ஏற்பட்டுவிடுகின்றது. ஆனால் 100 பேருக்கு மேல் கல்வி கற்பிக்க முடிகின்றது. அதுதான் உண்மை.
இன்று கொரோனா தொற்று காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களிற்குள்ளாகியிருக்கின்றார்கள். ஒரு வருடங்களிற்கு மேலாக கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஆசியிரியர்கின் செயற்பாடானது முன்மாதிரியானதாக இருக்க வேண்டும்.
சூம் செயலி ஊடான வகுப்புக்களிற்கான பணத்தினை நேரடியாக தர முடியாவிட்டால் வங்கியில் வைப்பிடுமாறு கூறி, பணம் செலுத்திய பின்னர்தான் அதன்கான உட்செல்கை இரகசிய குறியூட்டை வழங்கும் மிக கீழ்த்தரமான ஆசிரியர்களும் இந்த நாட்டில்தான் இருக்கின்றார்கள்.
ஆசிரியர் சமூகம் என்பது முன்மாதிரியானதாக இருக்க வேண்டும். நாங்கள் கல்வி கற்கும்பொழுது, வடமாகாணத்தில் இருக்கின்ற ஆசிரியர்கள் மாத்தளை மாவட்டங்களில் கல்வி கற்பிக்கும்பொழுது பாடசாலை முடிந்த பின்னர் தனியார் வகுப்புக்களை இலவசமாக நடார்த்தினார்கள்.
இது வரலாறு. உணர்வுபூர்வமாக செயற்பட்டவர்கள் இந்த வடக்கு கிழக்கு ஆசிரியர்கள். வடக்கு கிழக்கு ஆசிரியர்கள் தமது குடும்பத்தை விட்டுவிட்டு வாடகை வீடுகளில் இருந்து தமது வருமானத்திலிருந்து வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவுகளிற்கு மத்தியில் பிள்ளைகளின் படிப்பை எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றி பெற்றுக்கொடுத்தார்கள்.
ஆனால் இன்று, கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் சமூகம் மிக மோசமான நிலையைதான் பின்பற்றுகின்றார்கள். பாடசாலைக்கு வெளியே கல்வி கற்பிப்பதில் ஆர்வம் காட்டும் நிலைமையையே காணப்படுகின்றது. இந்த நிலை மாறி ஆசிரியர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews