மருத்துவ குணம் நிறைந்த மண்பபாண்ட உற்பத்திகளே சிறந்தது என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு  பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமது வாழ்வாதாரமாக பல வருட காலமாக மண்பாண்ட உற்பத்தியினையே மேற்கொண்டு வருகின்றனர்.

அதனையே பிரதான வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வரும் நிலையில் மண்பாண்ட உற்பத்திகளை செய்ய முடியாத நிலையும், உரிய விலைக்கு  விற்பனை  செய்யமுடியாத  நிலையும்  தற்பொழுது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை இருப்பினும் அதற்கு ஏற்றவகையில் மக்களின்  மனங்களை கவரக்கூடிய வகையில் மட்பாண்ட உற்பத்தியின் உற்பத்தியில் பயன்படுத்தி உணவு சமைத்து உண்பது  முலம் பல நலனை பெறமுடியும் என நம்பிக்கை வெளியிடுகின்றனர்.
அலுமினிய பாத்தியத்தில்  சமைப்பதன்  மூலம்  பல நோய்த்தாக்கங்கள் ஏற்படுவதாகவும்  வியாபாரம் மட்டுமன்றி  மக்களின்  நலனையும்  கருத்தில்  கொண்டே  இவ் வகையான  பொருட்களை  உற்ப்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றோம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது  இப்பொருட்களுக்கு  நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில் பல்வகையான பொருட்களையும் உற்பத்தி செய்து தற்பொழுது விற்பனை செய்து வருகின்றனர்.
முன்னைய காலத்தில் சட்டிபானை என்பதை மாத்திரம் தாங்கள் உற்பத்தி செய்து வந்ததாகவும் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் தற்போது கவர்ச்சிகரமான  பொருட்களை வழங்குவதன் மூலம் வருவாயை பெற முடிவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews