நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பெரும் போக  நெற் செய்கை தொடர்பாான  கூட்டம்……!

நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பெரும் போக  நெற் செய்கை தொடர்பாான  கூட்டம் அதன் செயலாளர்  க.காாண்டீபன் தலமையில் இடம்  நேற்று முன்தினம் காலை  11.00 மணியளவில் இடம் பெற்றது.

மூதூர் கிழக்கில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் மழைநீரை மட்டும் நம்பி காலபோக செய்கையில் ஈடுபடும் காயன்கேணிக்குளம்.  வேலப்பெருமாள் குளம் மற்றும் மேட்டுக்காணி வெளிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கான பெரும் போக நெற் செய்கையை  தீர்மானிப்பபதற்க்காக இடம் பெற்ற இப்  பொதுக் கூட்டத்தில் நிகழ்வில் தோப்பூர் கமநல சேவை நிலைய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்  மற்றும் பிரதேசத்திற்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர் விவசாயிகள் போன்றோர் கலந்து கொண்டனர். இப்பகுதி விவசாயிகள் வருடந்தோறும் யானைகள் கட்டாக்காலி மாடுகள் போன்றவற்றால் பாதிப்படைந்து வருகின்றனர்.
இப்பாதிப்புக்களிலிருந்து விடுபடாவிட்டால் உணவுப் பஞ்சத்தை எதிர் கொள்ள வேண்டியேற்படும் என்பதனால் துறைசார் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சுட்டிக் காட்டியிருந்தனர்.பொருளாதாரப் பிரச்சனை மற்றும் விலை அதிகரிப்புக் காரணமாக வேலியடைக்காது பயிர்ச் செய்கையில் ஈடுபடவும் மாடுகளை வெளியேற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது

Recommended For You

About the Author: Editor Elukainews