பிறைடர்ஸ் பிரீமியர் லீக் – 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் 2022 மூன்றாவது நாள் சுற்றுப்போட்டி இன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியானது தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகரசபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் அக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இன்று முதலாவது போட்டியில் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி மோதவுள்ளது.

இரண்டாவது போட்டியில் யாழ். சீட்டாஸ் அணியை எதிர்த்து வேலனை வேங்கைகள் அணி மோதவுள்ளது.

மூன்றாவது போட்டியில் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணியை எதிர்த்து ஏ1 ராஜா அணி மோதவுள்ளது.

“யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் – 2022” துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் (இருபதுக்கு – இருபது) முதல்நாள் சுற்றுப்போட்டியில் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியும் அரியாலை கில்லாடிகள் 100 அணியும் மோதிக் கொண்டன.

இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை கில்லாடிகள் 100 அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்கள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100 அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக சுழிபுரம் கிறீன் ராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஜி.லிங்கநாதன் தெரிவானார்.

இரண்டாவது நாள் சுற்றுப்போட்டியில் சுழிபுரம் றைனோஸ் அணியும் றைசிங் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சுழிபுரம் றைனோஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் ஸ்ரார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 4 விக்கட்கள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் றைனோஸ் அணி 17. 2 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் 9 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதன் மூலம் றைசிங் ஸ்ரார்ஸ் அணி 67 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக றைசிங் ஸ்ரார்ஸ் அணியில் துடுப்பாட்டித்தில் 43 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை விளாசிய ஏ. ஜன்சன் தெரிவானார்.

மூன்றாவது நாள் சுற்றுப்போட்டியில் கிரிக்கெட் நைட்ஸ் அணியும் ஜப்னா றோயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் நைட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, கிரிக்கெட் நைட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா றோயல்ஸ் அணி 19. 3 ஆவது பந்துப் பரிமாற்றத்தில் சகல விக்கட்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் மூலம் கிரிக்கெட் நைட்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக கிரிக்கெட் நைட்ஸ் அணியில் சகல துறையில் கலக்கிய எஸ். அஜித் தெரிவானார்.

நான்காவது நாள் சுற்றுப்போட்டியில் யாழ். சீட்டாஸ் அணியும் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் சீட்டாஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் சீட்டாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17.4 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 10 விக்கட்கள் இழப்பிற்கு 110 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 118 ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம் ஜப்னா சலன்ஜேர்ஸ் அணி 2 விக்கட்டுக்களால் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா சலன்ஜேர்ஸ் அணியின் ஜி.ஜெரிக்தூசன் தெரிவானார்.

ஐந்தாவது நாள் சுற்றுப்போட்டியில் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணியும் கொக்குவில் ஸ்ரார்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இப்போட்டியின், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 9 விக்கட்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் ஸ்ரார்ஸ் அணி 19 ஆவது பந்துப் பரிமாற்றத்தின் நிறைவில் 144 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் சுண்டிக்குளி ஈகிள்ஸ் அணி 21 ஓட்டங்கள் மூலம் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக அபினாஷ் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin