குழந்தையின் உயிரை பறித்த ஆலங்கட்டி மழை..! ஸ்பெயினில் சம்பவம்

ஸ்பெயினில் பெய்த ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்­தை­யொன்று உயி­ரி­ழந்­த­துள்ளது.

ஸ்பெய்னின் வட பிராந்­தி­யத்­தி­லுள்ள கட்­ட­லோ­னியா மாகா­ணத்தின் கிரோனோ பகு­தியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை (30) மழை­யுடன் பாரிய ஆலங்­கட்­டிகள் வீழ்ந்­தன.

சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் நகரின் பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லூ பிஸ்பால் டி எம்­போர்டா எனும் கிராமத்தில் பாரிய ஆலங்­கட்டி வீழ்ந்­ததால் 20 மாத குழந்­தை­யொன்று காய­ம­டைந்­தது.

கிரோனா நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு இக்­கு­ழந்தை அவ­ச­ர­மாக கொண்டு செல்­லப்­பட்­டது. எனினும், சில மணித்­தி­யா­லங்­களின் பின்னர் இக்­கு­ழந்தை உயி­ரிந்­தது என அதிகாரிகள் கூறி­யுள்­ளனர்.

இதேவேளை, இந்த ஆலங்­கட்­டிகள் வீழ்ந்­ததால் சுமார் 50 பேர் காய­ம­டைந்­துள்­ளனர் என தக­வல்கள் வெளியாகியுள்ளன.

பாரிய ஆலங்­கட்­டிகள் வீழ்ந்­ததால் பல வீடு­களின் கூரைகள், ஜன்­னல்கள், வாக­னங்­களின் கண்­ணா­டி­களும் சேத­ம­டைந்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

Recommended For You

About the Author: admin