நேற்று இலங்கையில் 160 கொரோணா மரணங்கள் பதிவு…!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 160 மரணங்கள் நேற்றைய தினம்  (13) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,775 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 160 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 5,935 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 160 பேரில், 87 பேர் ஆண்கள், 73 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews