வனவள திணைக்களத்தின் 3 சுற்றறிக்கைகள் இரத்து! மாவட்ட செயலர், பிரதேச செயலருக்கு அதிகாரம்.. |

வனவள பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சினால் முன்னதாக வெளியிடப்பட்டிருந்த 3 சுற்றறிக்கைகள் இரத்துச் செய்யப்பட்டு வனம் ஆக்கப்படும் பகுதிகள் தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என புதிய சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.

2021.08.06 காணி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. MWFC/1/2020-20201104 சுற்றறிக்கை மூலம் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினால் வழங்கப்பட்ட 05/98-1998.07.01 சுற்றறிக்கை, 05/2021-2021.08.10 சுற்றறிக்கை, சுற்றுச்சூழல் அமைச்சினால் வழங்கப்பட்ட

02/2006-2006.05.17 சுற்றறிக்கைகள் இதன் மூலம் இரத்து செய்யப்படுகின்றன.காணி அபிவிருத்தி சட்டத்தின் பிரிவு 8இன் பிரகாரம் காணி ஆணையாளர் ஜெனரலின் சாதாரண அல்லது விசேட ஏற்பாடுகளின் பிரகாரம் பிரதேச செயலாளரினால் அரசு நிலங்கள் 15ஐ பல்வேறு காரணங்களுக்காக நிலம் ஒதுக்கப்படலாம்.

வனப்பாதுகாப்பு ஜெனரல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஜெனரல் ஆகியோரால் வர்த்தமானி வெளியிடப்பட்ட நிலங்களைத் தவிர ஏனைய அடையாளப்படுத்தப்பட்ட நிலங்கள் மற்றும் காடுகள் பிரதேச செயலாளரினான் கட்டுப்பாட்டில் உள்ளடக்கப்படுகிறது.வனாந்திரமாக ஒதுக்கப்பட வேண்டிய நிலங்கள் தொடர்பில் ஆராய்ந்து

வர்த்தமானி பிரசுரிப்பதற்கு பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ,நிலப் பகிர்ந்தளிப்பு ஆகியவற்றை மாவட்ட செயலாளரின் மேற்பார்வையின் கீழ் பிரதேச செயலாளரினால் நடைமுறைப்படுத்தப்பட முடியும்

என புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews