எரிபொருள் விநியோகம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்

நாட்டை வந்தடைந்துள்ள சுப்பர் டீசல் கப்பலில் இருந்து, சுப்பர் டீசலை தரையிறக்கும் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில், கப்பலில் இருந்து நேற்று தரையிறக்கப்பட இருந்த சூப்பர் டீசல், வங்கி நடவடிக்கைகளின் காரணமாக தரையிறக்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 40,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், 92 ரக ஒக்டேன் பெட்ரோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் 27 மற்றும் 29ஆம் திகதிகளில் நாட்டிற்கு வரவுள்ளது.

குறித்த கப்பலில் 33,000 மெற்றிக் தொன் பெட்ரோல் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நாட்டை வந்தடைந்த 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும்,தாமதமான எரிபொருள் விநியோகத்தை ஈடுகட்ட இரவு நேர விநியோகமும் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin