சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமையால் பரபரப்பு.

கிளிநொச்சியில் சற்று முன்னர் பிரதேச சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை கிளிநொச்சியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த  ஊழியர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது  விஜயகுமார் திடீர் மரணம்
கிளிநொச்சி நகரில் திருநகர் வீதியில் அரச நில அளவைத் திணைக்களத்துக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுகாதாரத்தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சாதாரணமாக பணிக்கு வந்தவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews