இரண்டு தடுப்பூசிகளும் போட்டவர்கள் இலங்கை வரலாம்…!

இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இலங்கையர்கள், இந்தியாவிலிருந்து நாட்டுக்குள்  நுழைவதற்கு வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதி தேவையில்லை என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

 

அவர்கள் வந்தவுடன் விமான நிலையத்தில் பிசிஆர் சோதனை செய்ய வேண்டும்.முதலாவது பிசிஆர் சோதனையில் தொற்று இல்லையென உறுதியானால் அவர்கள் நாட்டுக்குள் நுழையலாம்.

இருப்பினும், இந்தியாவைத் தவிர, பிற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews