மனைவி, பிள்ளைகள் மாயம்: கணவன் முறைப்பாடு!

வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் சற்குணசிங்கம் தமிழினி மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா, கனிஸ்கா ஆகியோர் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் குடும்பத்தினருடன் கணவர், மனைவி, இரு பிள்ளைகள் என நால்வர் வசித்து வந்த நிலையில் கடந்த 10.08.2021 அன்று கணவர் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் காணவில்லை. இதனையடுதது கணவரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சற்குணசிங்கம் தமிழினி (32) மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா (5), கனிஸ்கா (4) ஆகியோரே காணாமல் போனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிவிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0777111103, 0775945839 என்ற இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு

Recommended For You

About the Author: Editor Elukainews