பழைய திருடர்களை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டாம்- ஜே.சி.அலவத்துவல எம்.பி

பழைய திருடர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றே ஜனாதிபதியிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி, மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கரிசணையுடன் செயற்படுகின்றாரா என்பது சந்தேகம் எழுந்து

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த பலருக்கு மீண்டும் அமைச்சுப்பொறுப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த அமைச்சரவையில் அங்கம் வகித்த பலர் தற்போதைய அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கின்றனர்.

அவர்களுக்கும் மேலாக மேலும் 10 பேருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகவே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டு மக்கள் எதனை எதிர்பார்த்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர் என்றே தற்போதைய ஆட்சியாளர்களிடம் கேட்க விரும்புகின்றோம்.

இரண்டு வருட ஆட்சியின் காரணமாக 220 இலட்சம் மக்கள் வாழ முடியாத ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ராஜபக்ஷர்களின் குடும்பத்தை மட்டுமல்ல ராஜபக்ஷர்கள் தலைமையிலான அமைச்சரவையும் கூட நாட்டுமக்கள் வேண்டாம் என்றே நினைக்கின்றனர்.

எனவே மீண்டுமொருமுறை அவர்களையே அமைச்சரவைக்குள் உள்வாங்கி அரசாங்கத்தை செல்வதற்கு முயற்சித்தால் அது சிறந்த விடயமாக இருக்காது.

இதற்கூடாக அக்கிராசன உரையில் ஆற்றிய விடயங்களை செயற்படுத்திக்கொள்ள முடியுமா என்றே ஜனாதிபதியிடம் கேட்கின்றோம்.

மக்கள் ஆணையில்லாத குழுவினருடன் முழு நாடுமே வேண்டாம் என்று கூறும் தரப்பினருடன் இணைந்து எவ்வாறு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்?

எனவே தயவுசெய்து பழைய திருடர்களை மீண்டும் கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டாம்.

Recommended For You

About the Author: Editor Elukainews