யாழ்.கொடிகாமம் பகுதியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.கொடிகாமம் பகுதியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர்.

கொடிகாமம் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக எழுமாற்று பரிசோதனைகள் நடத்தப்படுகின்றது.

இதன்படி நேற்றய தினம் எழுமாற்று பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் தொற்று அறிகுறியுடன் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

குறித்த நபர் கொடிகாமம் சந்தை வியாபாரி என கூறப்படுகின்றது. இதேவேளை இன்றைய தினம் 11 அன்டிஜன் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கொடிகாமம் மக்கள் வங்கி பணியாளர் எனவும், மற்றயவர் கச்சாய் பகுதியை சேர்ந்த முதியவர் எனவும் சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளதுடன் மேலும் 84 போிடம் பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அதனுள் சந்தை வர்த்தகர்களும் அடங்குவதாகவும் அதன் முடிவுகள் வெளியானவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews