யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 152 இடங்களை சுரட்டும் தொல்பொருள் திணைக்களம்…!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களில் 152 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 69 அரசிதழ் வெளியிடப்பட்டும்,

32 தொல் பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டும், 51இடங்கள் அரசிதலுக்காக அனுப்பப்பட்டும் உள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூரில் 21 இடங்கள் தொல்பொருள் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 17 இடங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டும்,

4 அரசிதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நெடுந்தீவு, வேலணை ஊர்காவற்துறை ஆகிய பிரதேசங்களில் 34 இடங்கள் தொல்பொருள் இடங்களாக

அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 20 இடங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டும் 14 இடங்கள் அரசிதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

காரைநகர், சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, கோப்பாய், உடுவில் ஆகியவற்றில் 43 இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில்

16 இடங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டும் 16 இடங்கள் அறிவிப்பு விடுக்கப்பட்டும் 11 இடங்கள் அரசிதலுக்காக அனுப்பப்படுள்ளது.

கரவெட்டி பருத்தித்துறை மருதங்கேணி ஆகியவற்றில் 24 இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 8 இடங்கள் அரசிதழ் விடுக்கப்பட்டும்

10இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அறிவிப்பு விடுக்கப்பட்டும் 6 இடங்கள் அரசிதழுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் 9 இடங்கள் அடையாளப்படுத்தப் பட்டுள்ள நிலையில் 2 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அறிவிப்பு விடுக்கப்பட்டும் 7 இடங்கள் அரசிதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

கண்டாவளை கரைச்சி பூநகரி பாலாவி ஆகியவற்றில் 21 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில்

8 இடங்கள் அரசிதழ் விடுக்கப்பட்டும் 4 இடங்கள் அறிவிப்பு விடுக்கப்பட்டும் 9 இடங்கள் அரசிதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews