தொண்டைமானாறு கடலில் இறந்த நிலையில் கரையோரங்கும் மீன்கள்…..!

தொண்டைமானாறு  கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் கரையோரங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறு மீன்கள்  இறந்த நிலையில் கரை  ஒதுங்கியதற்கான காரணம் தொடர்பில் மீனவர்கள் குறிப்பிடும் போது   கடல்  ஏரியின் நீர் மட்டம் குறைந்து உப்பு  செறிவு அதிகரித்ததன் விளைவாக இவ்வாறு மீன்கள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
தொண்டமனாறு கடனீரேரியின் மேலதிக பாய்ச்சல் நீர்  கடலிற்க்கு செல்லாமல் உவர் நீர் மட்டத்தின் அளவை குறைத்து நன்னீர் ஆக்கும் திட்டத்திற்கு அமைவாக கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளமையாலேயே இவ்வாறு உப்பு செறிவு அதிகரிப்பு ஏற்படுவதாகவும் இதன் விளைவாகவே மீன்கள் இறப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews