டீசல் விநியோகத்திற்கு இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து முகாமையாளர் கைது!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர்இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு திணைக்கள அதிகாரிகளால்  (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பேருந்துக்கு டீசல் வழங்குவதற்கு 75 ஆயிரம் ரூபா இலஞ்சம் பேருந்து உரிமையாளரிடம் வாங்கிய போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தனியார் பேருந்துகளுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக டீசல் வழங்கம் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் தனியார் பேருந்துகள் டீசலை பெற்று வந்துள்ளன. இதன்போது தனியார் பேருந்துகளிடம் போக்குவரத்து சபை முகாமையாளர் டீசல் வழங்குவதற்கு இலஞ்சமாக பணம் கோரியுள்ளார். அதற்கான பணத்தை வழங்கி தனியார் பேருந்து உரிமையாளர்கள் டீசலை பெற்று வந்துள்ளனர்.

இதனை தனியார் பேருந்து உரிமையார் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குவிற்கு முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து அவர்களின் ஆலோசணைக்கமைய சம்பவதினமான மாலை 5.30 மணிக்கு போக்குவரத்து சபையில் மாறுவேடத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் இருந்துள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து சபை முகாமையாளர் கோரிய இலஞ்ச பணமான 75 ஆயிரம் ரூபாவை தனியார் பேருந்து உரிமையாளர் வழங்கிய போது மறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கையும் களுவுமாக பிடித்து அவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முகாமையாளரை மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews