எரிபொருள் விநியோகத்தில் ஒகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்.

QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் இது குறித்து அறியப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, பொதுபோக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருள் விநியோகிக்கும் அளவு தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை,  வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகிக்கும் செயன்முறை இம்மாதத்துடன் முடிவுறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews