மட்டு.அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 2022 தேர்த்திருவிழா.

வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 2022 ஆண்டு ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ கோலாகலமாக இடம்பெற்றது.

இராம பிரான் மற்றும் இராவணண் வழிபட்ட ஆலயமாகவும் மூல மூர்த்தி,தீர்த்ததலம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டமைந்துள்ள ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

ஆலய மஹோற்சவகாலங்களில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தராஜ குருக்களின் தலைமையில் தினமும் தம்ப பூஜை ,வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா நடைபெற்றது.

இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக பூசை மற்றும் அபிசேக பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று வேத,நாத,மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசம் வானைப்பிளக்க தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் வடம்பிடிக்க தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையில் பிதிர்க்கடன் தீர்க்கும் ஆலயமாக பிரசித்திபெற்றுள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நாளை ஆடி அமாவாசை தினத்தன்று தாய் தந்தையர்களை இழந்த பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்காக பிதிர்க்கடன் செலுத்துவதோடு, நாளை நண்பகல் தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்த குளத்தில் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது..

Recommended For You

About the Author: Editor Elukainews