மட்டு.அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பெருமான் புகழ் இறுவெட்டு வெளியீடு.

கிழக்கிலங்கையில் சிவபூமி என சிறப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் 2022 ஆண்டு; ஆடி அமாவாசை மஹோற்சவ பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் ‘ஆடி அமாவாசை திருவிழா ‘ எனும் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பெருமானின் சிறப்பினை வெளிப்படுத்தும் பிள்ளையார் திருப்புகழ் பாடும் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது

அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர் தியாகராஜா விக்ரமன் தலைமையில் ஆலய வண்ணக்கர்மார் சபையினரால் ஏழூர் குருகுல வம்ச மக்களினால் நேற்று மாலை சிறப்பிக்கப்பட்ட எட்டாம் நாள் திருவிழாவின் போது ஆலய முன்றலில் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது

2022 ஆடி அமாவாசை மஹோற்சவ பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் பாடல் வரிகளில் தென்னிந்திய பாடகர் தமிழிசை வேங்கை டி எல் . மகராஜன் இசையமைத்து பாடிய ஆறு பாடல்களை கொண்ட இறுவெட்டு ஆலய பிரதம ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தராஜ குருக்களின் ஆசியுரையுடன் ஆலய வண்ணக்கர்மார் சபையினரால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த இறுவெட்டு வெளியிட்டு நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் உட்பட மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் , ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் , ஏழூர் மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews