யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் ஒரு கொரோனா விடுதி தயார் நிலையில்!

யாழ்.மாவட்டத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் ஒரு கொரோனா சிகிச்சை விடுதி அமைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகள் இயங்கி வருகின்றது.

குறித்த விடுதியில் நோயாளர்களால் நிரம்பியுள்ள நிலையில் தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டும் வருகின்றனர். இதனால் மேலும் ஒரு விடுதியை தயார் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews