ஆட்டோவுக்கு பெற்றோல் இல்லை. பிரசவ வலியால் அவதி, நடு வீதியில் கர்ப்பவதி, வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியின் மனிதாபிமானம்….. |

ஆட்டோவுக்கு பெற்றோல் தீர்ந்தமையால் வீதியில் நின்று அந்தரித்த கர்ப்பவதி பெண் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது வாகனத்தில் ஏற்றி சென்று  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தொல்புரம் பகுதியில் கர்பவதி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டி மூலம் பயணித்துள்ளார்.

இந்நிலையில் வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்து பயணித்த நிலையில் முச்சக்கரவண்டியின் பெற்றோல் நிறைவடைந்த நிலையில் பொலிஸ்நிலையத்திற்கு சென்று பெற்றோல் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கர்பவதியின் அவசர நிலையை அறிந்து உடனடியாக பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி சமன் குணதிலக தனது வாகனத்தில் கர்பவதியை பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் ஏற்றிசென்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நேரத்தில் கர்பவதி பாதுகாப்பாக சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் பலரது பாராட்டுக்களும் வட்டுக்கோட்டை பொலிசாருக்கு குவிந்து வருகின்றது.

மேலும் இரண்டு வருடத்திற்கு முன்பும் முச்சக்கரவண்டி பழுதடைந்து பிரசவ வலியால் தவித்த தாயொருவரையும் குறித்து பொறுப்பதிகாரி தனது வாகனத்தில் ஏற்றிசென்று மகப்பேற்றுக்குஉதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews