இ.போ.ச மற்றும் தனியார் போக்குவரத்து சாரதி நடத்துனர் இடையே நடு வீதியில் கைகலப்பு …!

இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலை பேரூந்தின் சாரதி காப்பளர் மற்றும் தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் உள்ளிட்டோருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
 
இன்று காலை 06.20 மணியளவில் கரடி போக்கு சந்தியில் ஏ9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது காயமடைந்ததாக தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலை பேரூந்தின் சாரதி காப்பளர்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் .
சம்பவத்தின்போது பயணிகள் பேருந்துகளில் இருந்துள்ளனர். எனினும் அவர்களிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமையும் குறிப்பிடத்த்தது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews