பருத்தித்துறையில் ஆசிரியர்கள் போராட்டம் ….!

சம்பள முரண்பாடு மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் இன்றைய தினம் காலை 11 மணிக்கு பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

 

வடமராட்சி வலய இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சங்கம் ஆகியன இணைந்து அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கமாகவே இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சம்பள உயர்வை கேட்கவில்லை  எமது சம்பளத்தையே கேட்கிறோம், பிள்ளைகளின் கல்வியை சிதைக்காதே கல்வியை உறுதிப்படுத்திக், ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்த்துவைக்க, இலங்கை கல்வியை இராணுவ மயமாக்காதே, இருபத்து நான்கு வருட ஆசிரியர் அதிபர்களின் சம்பள  முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்கு, ஆசிரியர், மாணவர்கள் சிறுவர்கள்,  பெற்றோர்களை துன்புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வை வழங்கு, இல்லாது செய்த எமது சம்பளத்தை எமக்கு தா உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் இடம் பெற்றது.


முன்னதாக பருத்தித்துறை நகரிலிருந்து பேரணியாக ஆரம்பமாகிய போராட்டம் பருத்தித்துறை நவீன சந்தை சுற்று வீதியால் பஸ் தரிப்பு நிலையத்தை  வந்தைந்து போராட்டம் நிறைவுற்றதும்

இதில் வடமராட்சி வலய ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கத்தை சேர்ந்த பதின்னான்கு சங்கங்களின் பிரதிநிதிகள் என சுமார் நூறுபேர் வரை கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews