மு.உயிலங்குளம் பாடசாலைக்கு தமிழர் தேசிய பேரவை உதவி….!

இளையசமுதாயத்தின் கைகளில் எதிர்காலம் என்னும் சிந்தனையின் வெளிப்பாட்டுடன்
தமிழர் தேசியப் பேரவையின் தாயகத்திற்கான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான மு/உயிலங்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டே குறித்த கிராம பாடசாலை தெரிவு செய்யப்பட்டது.

குறித்த பாடசாலையில் கல்விகற்றுவரும் 30 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் (150000) ரூபா பெறுமதியான, புத்தகப்பை, பாதணிகள், அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் த.ஸ்வரராமனன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மங்கள விளக்கினை தமிழர் தேசியப் பேரவையின் முதன்மைச் செயற்பாட்டாளர் ஏற்றிவைத்தார்.இதே வேளை
முல்லைத்தீவு மாவட்ட தமிழர் தேசியப் பேரவையின் இணைப்பாளர் தனுசன் தமிழர் தேசிய பேரவையின் செயற்திட்டங்கள் குறித்து கருத்துரை நிகழ்த்தினார்,

தொடர்ந்து பாடசாலை அபிவிருத்திசங்க செயலாளர் திருமதி. பி.சோபனா நன்றியுரை நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மற்றும்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.விஜிதரன்
திரு.கே.தனுசன்
முல்லைமாவட்ட தமிழ்தேசியப்பேரவை
இனைப்பாளர் கே தனுசன் மற்றும் தமிழர் தேசியப் பேரவையின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews