இரத்மலானையில் வாகனம் ஓட்டும் ஆசனத்தில் இருந்த சாரதி திடீர் மரணம்.!

இரத்மலானையில் கொள்கலன் லொறி ஒன்றிற்குள் சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இரத்மலானை சுமங்கல வீதியிலுள்ள பிரதான ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனத்திற்கு பொருட்கள் கொண்டு சென்ற சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புலத்சிங்கல கோவில் வீதி பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.

நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு வந்த கொள்கலன் லொறியின் சாரதி வாகனத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். எப்படியிருப்பினும் நேற்று காலை அவரை அழைத்த போது எழுந்திருக்காமையினால் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளனர்.

உயிரிழந்தவருக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்வதற்காக சடலம் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews