பொது போக்குவரத்தில் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரை இல்லை. அமைச்சு….!

பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயணிகள் தடுப்பூசி பெற்றிருப்பதை கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்த நடைமுறை சாத்தியப்படலாம்.

ஆனால் தற்போது இந்த விடயம் சாத்தியமான விடயமல்ல என்றும் திலும் அமுனுகம குறிப்பிட்டார். பரபரப்பாக இயங்கும் குறித்த சேவையின்போது அனைவரிடமும் தடுப்பூசிக்கான சான்றிதழை பரிசோதனை செய்வது என்பது

இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews