பருத்தித்துறை போராட்டத்திற்க்கு அதிபர் ஆசிரியர்களுக்கு அழைப்பு….!

தேசிய ரீதியில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு மற்றும் கல்வியை இராணுவ மயமாக்கும் சேர் ஜோன் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் இடம்பெறும் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமராட்சி பருத்தித்துறை பஸ் நிலைத்திற்கு முன்பாக எதிர்வரும் திங்கள் 09/08/2021 காலை 10:30 மணிக்கு இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு அனைவரும் அணிதிரளுமாறு கோரி வடமராட்சி ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று காலை 10:45 மணிக்கு வடமராட்சி கரணவாய் வடக்கு கம்பன் சனசமூக நிலையத்தில் இடம் பெற்றது.


இதில் வடமராட்சி வலய இலங்கை ஆசிரியர் சேவை சங்க தலைவர் திருமதி ஜனனி நிசாந்த் செயலாளர் சு.யசீலன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வடமாகாண செயலாளருமான புயல் சிறிகந்தநேசன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

மேலும் தெரிவித்ததாவது இலங்கையில் ஆசிரியர்கள் குறைந்தளவு வேதனத்தை பெற்றுக் கொள்வதாகவும் அதனை உயர்த்தித் தருமாறும் கோரியும் சேர் ஜோன் கொத்தலாவல சட்ட மூலத்தை அரசு உடனடியாக நிறுத்தவும் வேண்டும் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்வதாகவும் தமக்கு மட்டும் சம்பள உயர்விற்க்கு நிதி இல்லை என்று தெரிவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்ததுடன் தற்போதைய சூழலில் இணைய கற்கைக்கு கூட சிமாட் தொலைபேசி கொள்வனவு செய்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியாத நிலைமையில் ஆசிரியர்கள் இருப்தாகவும் ,இதைவிட மோசமான நிலையில் மாணவர்கள் இருப்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews