இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான அமீரக தடை நாளை முதல் நீக்கம்…!

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் (UAE) நுழைதல் மற்றும் அதன் ஊடாக பயணிப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை அந்நாடு நீக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, நாளை (05) முதல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, உகண்டா, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தேவையான தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அங்கு அவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு நுழைய அல்லது கடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்

Recommended For You

About the Author: Editor Elukainews