கட்டுப்பாடுகளை தளர்த்தும் அரசின் தீர்மானம் பேராபத்தானது! வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசுக்கு சுட்டிக்காட்டு…!

நாட்டில் டெல்டா வகை திரிபு வைரஸ் பரவல் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்டா திரிபு காரணமாக தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசின் முடிவு நெருப்புக்கு எரிபொருளைச் ஊற்றுவது போன்றது.

என்று சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நிலைமையை மோசமாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டின் சுகாதார அமைப்பை மூழ்கடிக்கும்.

நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பது வெறும் கனவாக இருக்கும்.எனவே தற்போதைய சூழ்நிலையை மறுபரிசீலனை செய்து, தற்போதுள்ள சுகாதாரம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளைத் திருத்தவேண்டும்.

மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்து அவர்களுக்குபோதிய வருமானத்தை வழங்க வேண்டியதும் அவசியமாகும். ஆனால் குடிமக்களின் உயிரைக் காப்பாற்றுவதே தற்போது அதிக முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews