நாட்டை முன்னேற்ற இதுவே ஒரே வழி – நாமல் ராஜபக்ச.

முன்னோடியான கலந்துரையாடல் மேற்கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தி முன்னேறுவதே நாட்டை முன்னோக்கி செல்ல ஒரே வழி என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர், அனைவரையும் ஒன்றிணைத்து இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் பணியாற்றுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பதவியில் இருப்பவர்களை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர், பதவி விலகல் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும், அதே நேரத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி செல்வதே இலங்கையின் முன்னோக்கிய ஒரே வழி என வலியுறுத்திய அவர், சுற்றுலாத்துறைக்கு பயனளிக்கும் வகையில் இலங்கையை மேம்படுத்தி, வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு வருமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

எப்படி கோஷமிட்டாலும், எந்தவொரு கோஷமும் நாட்டுக்கு பொருளாதார ரீதியில் உதவாது என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, முன்னோடியான கலந்துரையாடல் மற்றும் புரிந்துணர்வுக்கு வருவதே சிறந்ததாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். “அதன்பிறகு, ஒரு தேர்தலில், நேரம் வரும்போது மக்கள் தங்களைத் தீர்மானிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews