பசில் ராஜபக்சவின் யோசனைகளை இடைநிறுத்த நிதி அமைச்சு முடிவு.

பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு யோசனைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளன.

2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 4917 உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு தலா 4 மில்லியன் ரூபாய் வீதம் மொத்தம் 19.67 பில்லியன் ரூபாய் வழங்கும் யோசனை இடைநிறுத்தப்படும் திட்டங்களில் ஒன்றாகும்.

அத்துடன், முன்னாள் நிதி அமைச்சரின் கிராமப்புற சமூக மேம்பாட்டுக்கான 85 பில்லியன் ரூபா நிதித் திட்டமும் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பெரும் சுமையாகக் காணப்படும் உள்ளுராட்சி நிறுவனங்கள் உட்பட நாட்டின் பொதுத்துறை முழுவதும் சாத்தியமான செலவினக் குறைப்புகளை மீளாய்வு செய்வதற்கு ஏற்ப நிதி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews